mlns:expr='http://www.google.com/2005/gml/expr'> TN MOBILE PRICE

tm

new

Browsing Category

Mobile Phone Tips

Wednesday, 15 August 2018

சுதந்திர தின விழா பேச்சு கட்டுரை

அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்..


இன்று நாம் இங்கே, நமது இந்திய தாய் திருநாட்டின் 72 -வது குடியரசு தின விழாவை, கொண்டாடி மகிழ, இங்கே கூடி இருக்கும் தருவாயில்... எனது சிறிய உரையின் மூலம், நம் எண்ணங்களை வரலாற்றின் பொன்னெழுத்தில் பதிந்த... நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூற விரும்புகின்றேன்!!!  நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். வெள்ளையன் சும்மா கொடுத்தானா சுதந்திரம்?


இல்லை இல்லை பாரதி கண்ணீரில் வடித்த அந்த கவிதை இதோ..


“தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா


இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....


மேலோர்கள் வெஞ்சிறையில் வீழுந்து வெந்திடவும்


நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் கண்டு


தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா


இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....”


என்று அந்த சோகத்தை சொல்லும் அவர் கவிதை, நமக்கு சுதந்திரம் கிடைக்க போராடிய நெஞ்சங்களை நம் கண் முன் நிறுத்துகிறது ...!!! 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி


இருந்ததும் இந்நாடே - அதன்


முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து


முடிந்ததும் இந்நாடே - அவர்


சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து


சிறந்ததும் இந்நாடே - இதை


வந்தனை கூறி மனதில் இறுத்தி - என்


வாயுற வாழ்த்தேனோ ? இதை


"வந்தே மதரம், வந்தே மதரம்"


என்று வணங்கேனோ ?


 ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சிறப்பாக கருதப்படும் சில நாட்கள் உள்ளன.  நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசுதின கொண்டாட்டம் அந்த நாட்களில் ஒன்றாகும். நம் நாடானது 1947-ல் சுதந்திரம் பெற்றாலும் குடியரசானது 1950-ல் தான். ஏனெனில் நாடு சுதந்திரம் அடைந்த போது சிறு சிறு சமஸ்தானங்களாக நாடு சிதறுண்டு கிடந்தது. அதன் மன்னர்கள் வெறுமனே ஆங்கிலேயர்களின் மாத ஊதியத்தில் காலத்தை ஊதாரியாக கழித்தவர்கள். இவர்களையெல்லாம் மன்னர் மான்யம் வழங்கி நாட்டை ஒரே இந்தியாவென கொண்டு வந்த பெருமை சர்தார் பட்டேல் அவர்களை சாரும்.  இந்த நாளில்தான் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு  சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து,  இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட , ஜனநாயக மற்றும் குடியரசு நாடு 'என பிரகடனம் செய்யப்பட்டது.  


எனவே இந்த நாளில், அனைத்து மாநில தலை நகரங்களிலும், முக்கிய இடங்களிலும்,  மிகவும் ஆடம்பரமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு,  குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

நாட்டில் தலைவர் எப்படியோ குடிகளும் அப்படி இருப்பார்.. நம் நாட்டின் சிறந்த தலைவராக திகழ்ந்த காமராஜர் அவர்களை இந்த தினத்தில் நினவு கூர்ந்து என் உரையை முடிக்க விழைகிறேன்..


 காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.


‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?


வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.


“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.


“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.


நாடு முன்னேற நமது  உழைப்பு தேவை..   


“வரப்பு உயர நீர் உயரும்


நீர் உயர நெல் உயரும்


நெல் உயர கோல் உயரும்


கொல் உயர கோன் உயர்வான்”


என்ற கூற்றுப்படி நாடு உயரும் எனகூறி, உழைப்பின்  மூலமே நாம் அனைவரும் உயர முடியும் எனக் கூறி இந்த குடியரசு தினத்தில் எல்லோரும் கடுமையை உழைத்து முன்னேற உறுதி ஏற்க வேண்டுமாய் கோரி என் உரையை முடிக்கிறேன்  


நன்றி


வணக்கம்


ஜெய் ஹிந்த்

Sunday, 12 August 2018

இதையும் கொஞ்சம் படிங்க மெதுவா சிரிங்க

“முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?”


“ஆம் ஔவையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள்.பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை.”

“ஔவையே, கறுப்பு, வெள்ளை -எளிய தமிழில் விளக்கு.”


“ஐயனே, வரி கட்டியது வெள்ளை.கட்டாதது கறுப்பு!”


வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?”


கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!”“சுட்டது எது? சுட முடியாதது எது?”


சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்.!”“ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?”


“ஒழிக்க நினைத்தது கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!”


” அம்பானி, அ

தானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?”


“தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!”


என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?”


“அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!”


மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு.”


“”பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்.”


“கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே,உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன்.தயங்காமல் கேள்.”


“ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என்கையில் தள்ளி விட்டான்.அதற்கு இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்”

Thursday, 9 August 2018

அதிகமாக ஆசைப்பட்டால் இப்படித்தான் இனி நடக்குமாம்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.


ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள் 


"வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்..."


இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். 


எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!" என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.


"நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்".


பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: "கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை..."


பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.


 "உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?" என்றது அதிர்ஷ்ட தேவதை.


 "போதாது. இன்னும் வேண்டும்" என்றான் பிச்சைக்காரன்.


அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, "உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது".


 பிச்சைக்காரன் சொன்னான்... "இன்னும் கொஞ்சம் வேண்டும்"...". அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.


"உன் கோணிப்பை கிழியப் போகிறது...". 


பிச்சைக்காரன் மறுத்தான். "இல்லை... நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்..." மறு வினாடி கோணிப்பை கிழிந்தது.


அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது.


 பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

Monday, 2 July 2018

அரசனையே மிரள வைத்த சாதாரண நெசவாளியின் செயல்

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.

பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின்

 வீட்டில் தங்கினான்......!!


அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!! 


யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என


 நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!!


அரசன் காலையில் எழுந்து கொண்டபோது ,


   நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!!


அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!!


 அரசன் அந்த நெசவாளியிடம்


 "இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!!

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!!


 குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’

 என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.


அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது...... 


‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!!


‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!!


இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!!


 இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!!


அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!!


‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.....!!


‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது.


 அதன் தொல்லையை சமாளிக்க,


 இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ 

என்று பதில் சொன்னான்.....!!


அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.....!!


நெசவாளியைப் பார்த்து ,


‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.


‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது.......!!


 அதனால், 


அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்..... !!


அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்......!!!


‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்.....?


உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன்.....!!


அதற்கு நெசவாளி சொன்னான்:


 ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது....!!


 ஆகவே, 


அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள

 மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.....!!!


என்னிடம் பாடம் கேட்கும்போது,


 அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......!!!


ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா...??


 என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....!!!


நெசவாளி சொன்னான்: 


‘‘இது மட்டுமில்லை. 


என் மனைவி கிரேக்கத்துப் பெண்.


 ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்....,!!


வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...!!!


ஒருவன் விரும்பினால் ,


 ஒரே நேரத்தில் ,


 கற்றுக்கொள்ளவும்  ,


கற்றுத் தரவும் ,


வேலை செய்யவும் ,


வீட்டை கவனிக்கவும்

 முடியும் என்பதற்கு 

இந்த நெசவாளி தான் சாட்சி....!!


நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... !!


 தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....!!


உழைப்பே உயர்வினை தரும்.....!! 


அதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்.


Wednesday, 27 June 2018

உங்கள் வங்கி கணக்கில் பணம் உங்களுக்கு தெரியாமல் குறைந்து உள்ளதா?

உங்கள் வங்கி கணக்கில் பணம் உங்களுக்கு தெரியாமல் குறைந்து உள்ளதா ?


மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது. இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.


அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் “ஒபட்சு மேன்” { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.


அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) Lasix No Prescription என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.


வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.


சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் “ஒபட்சு மேன்” { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.


அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக

secweb.rbi.org.in BO ComplaintToNodalOfficer.

ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.


அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.


மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .


இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் “ஒபட்சுமேன்  Ombudsman secweb.rbi.org.in BO ComplaintToNodalOfficer


சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.


நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு “ஒபட்சு மேன்” க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.


மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு “ஒபட்சு மேன்” அதிகாரம் உள்ளது.

Saturday, 23 June 2018

கழுதை கற்று தந்த விடாமுயற்சி பாடம்

கழுதை கற்று தந்த விடாமுயற்சி பாடம்


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.


ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.


வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.


நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.


“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?


எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

இவர்களின் சமாதி எங்கே ?

இவர்களின் சமாதி எங்கே ?


எங்கே அந்த 

ராஜராஜ சோழன் சமாதி ?


எங்கே அந்த

ராஜேந்திர சோழன் சமாதி ?


எங்கே போனது என்

சூர்யவர்மன் சிலை?


எங்கேட அந்த 

குலோத்துங்கன் நினைவிடம்?


எங்கே போனது அந்த 

பாண்டிய மன்னனின் 

நினைவு மண்டபம்.?


எங்கே அந்த 

கரிகால சோழனின் சிலை?


எங்கே இருக்கு என் 

வேலுநாச்சியார் சமாதி ?


எங்குதான் இருக்கு 

சேரன் செங்குட்டுவனின் சமாதி ?


எங்கே அந்த அழகுமுத்தோட

நினைவு மண்டபம்.?உலக சாம்ராஜ்யங்களை

வென்றுகாட்டி நம் தேசத்திற்கு

வெள்ளையனைத் தேடி 

வரவழைத்த நம் 

முன்னோர்களுக்கு சரியான

சிலைகளுமில்லை,

நினைவு கட்டிடங்களும் இல்லை.


அவர்களின் வரலாறும் 

இல்லைகரிகாலன் கட்டியக் கல்லணை

இன்றுவரை சுற்றுலாத் தலமாக

மாற்றப்படவில்லை.


மாபெரும் கடற்படையை கட்டமைத்து

உலகின் பல நாடுகளை வென்று

மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய

ராஜேந்திர சோழனை பற்றி

இங்கே கற்பிக்கப்படவில்லை!


ஒவ்வொரு தமிழனும் தினமும் 

கோவிலுக்கு செல்கிறோம்

அந்தக் கோவிலைக் கட்டியவன்

யாரென்று கூடத் தெரியாமல்


எப்படி காட்டுவது நம் சந்ததிக்கு


பசுவுக்காக தன் மகனையே

கொன்ற சோழனின் 

கல்லறையை பார்


கஜினி முகமதுவை 

பதினேழு முறை 

ஓடவிட்டு விரட்டிய

நம் சோழனின் 

கல்லறையை பார்


தான் கட்டியக் கோவிலில் 

தன் பெயரை எழுதாமல் 

அதில் வேலை செய்த 

சிற்பக்கலைஞர்களின் 

பெயரை எழுதி வைத்த 

நம் ராஜ ராஜ சோழனின் 

கல்லறையை பார்மாகராஷ்ட்ராவில் எத்தனையோ

தலைவர்கள் ஆண்டாலும் 

இன்றும், முதல் மரியாதை 

சத்திரபதி சிவாஜிக்குத்தான்.


இனியாவது மாற்றுவோம்

சுதந்திர தின விழா பேச்சு கட்டுரை

அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்.. இன்று நாம் இங்கே, நமது இந்திய தாய் திருநாட்டின் 72 -வது குடியரசு தின விழாவை, கொண்டாடி மகிழ, இங்கே கூ...