1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB) (4 GB RAM)
2. Samsung Galaxy A50s
சட்டஅன்பு மக்களே.! உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்..!
நமது மக்களாக நம்மை நம்பியே , பாரம்பரியமாக பல ஆண்டுகளாக கடை வைத்து நடத்தி வரும் நம்ம ஊர் ஜவுளிக்கடைகள், உணவகங்கள், பாத்திரக்கடை,, எல்க்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கு நேரில் சென்று தீபாவளி பர்சேஸ் செய்து உள்ளூர் வணிகர்களை ஆதரியுங்கள்..!
சாலையோர சிறு குறு வியாபாரிகளிடம் சிறு தொகைக்காவது பொருட்களை வாங்கி அவர்களுக்கு வாழ்வளியுங்கள்..! கோஆப்டெக்ஸ் சென்று ஒரிரு கைத்தறி ஆடைகளையாவது வாங்கி நெசவாளர்களை வாழ வையுங்கள்..!
பிரமாண்ட கடை கண்டு வியந்து தேவையில்லாமல் அடிக்கடி மொபைல் போன் வாங்க வேண்டாம்..! சம்பாதித்த காசை நல்லவழியில் செலவழிக்க உள்ளூர் கடைகளுக்கு சென்றால் தான் இயலும்..! ஆன்லைனில் விலை குறைவு என சொல்லாதீர்கள்..!
ஒரு பொருள் வாங்க முயன்று அவர்கள் விளம்பர வலையில் வீழ்ந்து, கையில் இருக்கும் பணத்துக்கு மேல் தேவையற்ற பொருட்களை வாங்கி கடனாளி ஆனவர்கள் அதிகம்..!
ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்..! ஆன்லைனில் நீங்கள் பொருட்கள் வாங்குவது யாரை வாழ வைக்கிறது என உணருங்கள்..! உறவுகளை போற்றி, நலம் விசாரித்து, கைராசியோடு பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் பொருட்கள் வாங்குவது நம்மூர் மக்களை வாழ வைக்கும் ..!
வெள்ள நிவாரண நிதி, திருவிழா நன்கொடை, திருப்பணிகளுக்கு நன்கொடை, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி், இல்ல விழாக்களில் கலந்து கொண்டு வாழ்த்துவது உள்ளூர் வணிகர்கள் தானே..!
உள்ளூர் வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்போர் அனைவரும் நம் உடன்பிறவா சகோதர சகோதரிகள் அல்லவா? எனவே அன்பார்ந்த அன்பான மக்களே வரும் தீபாவளிக்கு துணிமணிகள், இனிப்புகள், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்டவைகளை , உள்ளூர் வணிகர்களின் கடைகளில் வாங்கி ஆதரவு தர அன்போடு வேண்டுகிறேன்..!
நன்றி
ப.கனகராஜ் , ஆசை டிவி, கரூர்.
மழைக்காலத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? மின்சார வாரியம் விளக்கம்
மழைக் காலங்களில் மின் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கியுள்ள மின்சார வாரியம், அவற்றை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மழைகாலத்தில் மக்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்ய வேண்டாத செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதன்படி, வீட்டில் ஒயரிங்கை சரிபார்த்து, பழுது இருந்தால் சரிசெய்து கொள்ள வேண்டும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைக் கண்டால் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மின்கசிவு தடுப்பானை, மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த வேண்டும் என்றும், உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற்ற சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் அணைத்து வைக்க வேண்டும் என்றும், மின்சாரத்தால் தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்திவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்கம்பிகளில் துணிகளை உலர்த்தக் கூடாது, மின் கம்பங்களை நிலை நிறுத்தும் கம்பி, வேலி ஆகியவற்றை மழைக் காலங்களில் தொடக் கூடாது அவற்றின் அருகில் நிற்க கூடாது, மின் வேலி அமைக்கக் கூடாது, மின் நிலை நிறுத்திகளை வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது, குளியல் அறையிலும்.
கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்தக் கூடாது, மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக் கூடாது , இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்சி, கிரண்டர், தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்றும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டுனர் உரிம கட்டணத்தை ‘ஆன்-லைனில்’ செலுத்தும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் வரி ஆகியவை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. பெயர் மாற்றம் செய்தல், உரிமம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை இணையதளம் மூலம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, விண்ணப்பதாரர்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான கட்டணத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக செலுத்தி வருகின்றனர்.பழகுனர் உரிமம், நிரந்தர ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுனர் உரிமம் பெறுதல் போன்ற பணிகளுக்கான கட்டணம் முழுவதுமாக மனுதாரர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து ‘ஆன்-லைன்’ மூலம் செலுத்தும் வசதி நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதனை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கிவைக்கிறார்.மனுதாரர்கள் நேரடியாக https://parivahan.gov.in/parivahan/ இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ‘ஆன்-லைன்’ மூலம் செலுத்தி பயன்பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ‘ஆன்-லைன்’ மனுவை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான கட்டணத்தையும் ‘ஆன்-லைனில்’ செலுத்தலாம்.வங்கி இணைய சேவை (நெட் பேங்கிங்), டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவும் பண பரிவர்த்தனை செய்யலாம்.
விண்ணப்பத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை இணையதளம் மூலம் ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தலாம்.செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று தகுந்த தேர்வில் கலந்துகொண்டு, புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம், கால விரயம் தவிர்க்கப்படுகிறது.மேலும் அலுவலக பணியாளர்களுக்கு பணிச்சுமை குறைந்து, இதர பணிகளில் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும். போக்குவரத்து துறையின் படிப்படியான முன்னேற்றத்தில் இது ஒரு மைல்கல் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நாளை முதல் பள்ளிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு சனிக்கிழமையுடன் நிறைவுபெறுவதைத் தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடம் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் கடந்த 10 -ஆம் தேதி (செப்.10) தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மொஹரம் பண்டிகை என்பதால் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை நாளாகும். இதன் காரணமாக சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிவடைகின்றன.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (செப். 23) முதல் அக்டோபர் 2 -ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 3 -ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தியை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில் அவரின் சிந்தனைகளையும் , கொள்கைகளையும் பின்பற்றும் வகையில் சிலவற்றை நினைவில் கொள்வோம்.
அசைக்கமுடியாத மனவுறுதியே உண்மையான பலமாகும். பிறரால் எதிர்க்க முடியாத வலிமையையும், தைரியத்தையும் கடவுளை சரணாகதி அடைந்தாள் மட்டுமே பெறமுடியும்.
தெய்வத்தின் கணக்கு புத்தகத்தில் நமது செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் படித்தவையும் பேசியவையும் அல்ல.
எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் உண்மையை பேசும் மன உறுதி வேண்டும். பொய் நிலைத்திருக்கமுடியாது உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.
உனக்கு நீயே நீதிபதியாக இருக்க கற்றுக்கொள். தனக்கு தானே நல்லவனாக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
புகழ், இகழ் இவ்விரண்டிலிருந்தும் யாராலும் தப்ப முடியாது. கடமையை மிகசசரியாக செய்பவர்கள் புகழ் வந்தாலும், இகழ் வந்தாலும் இரண்டையும் ஒன்றுபோல ஏற்றுகொள்ளும் மன பக்குவத்தை பெறுகின்றனர்.
பிரார்த்தனை உண்மையானதாக இருக்க வேண்டுமானால் வெறும் ஜெபமாலையை உருட்டுவதாக இல்லாமல் இதயம் அலையாமல் ஊன்றி நிற்க வேண்டும். சத்தியத்தை தெய்வமாக கருதி வணங்குவதே சிறந்த மார்க்கமாகும்.
மனிதன் வேறு அவனது செயல் வேறு . நற்செயலை புகழ்வோம், தீய செயல்களை இகழ்வோம். ஆனால் செய்தவன் நல்லவனாக இருந்தால் மதிப்பளிப்போம்.தீயவனானால் இரக்கம் காட்டுவோம்
இதய தூய்மையுடன் இருந்தால் இறைவன் நமது பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பான். உள்ளத்தூய்மை இல்லாதவர் செய்யும் பிரார்த்தனை விழலுக்கு இறைத்த நீரை போல் பலனளிக்காமல் போகும்.
கோயில் மட்டும் பக்திக்கும் வழிப்பாட்டிற்கும் உரியதல்ல, நாம் பணிபுரியும் இடமும் வணங்கவேண்டிய கோயிலாகும்.
ஆண்மை என்பது மற்றவரிடம் வீரத்துடன் நடப்பது மட்டுமல்ல. சந்தர்ப்பங்களுக்கு அடிமையாகாமல் சந்தர்ப்பத்தை தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே ஆண்மையுடைய வெற்றி வீரன்.
பகைவனை மன்னிக்க தெரியாதவன் உலகில் அடையக்கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அடையவில்லை என்று தான் சொல்லவேண்டும். எனவே எப்படிப்பட்ட பகைவனையும் மன்னிக்கும் குணத்தினை வளர்த்துக் கொள்வது அவசியம்மாகும்.
தனது செயலின் மூலம் கெட்டவர்களைக்கூட கொடியவர்கள் என கூறமுடியாது. ஆனால் மனதால் கெட்டவர்கள் தான் மிகவும் கொடியவர்கள் என கூறவேண்டும்.
கடவுளிடம் பேரம் பேசாதீர்கள். அவரை சரணாகதி அடைவதே மேன்மையான வாழ்வு தரும். கடவுளிடம் முழுமையான நம்பிக்கை வைப்பவர்கள் யாரிடமும் கோபமோ அல்லது வெறுப்போ காட்டமாட்டார்கள்.பகைமை உணர்வு அற்று போகும். அவர்கள் தீமையை மட்டும் வெறுப்பார்களே தவிர, ஒருபோதும் தீயவர்களை வெறுக்கமாட்டார்கள், அவர்களை நல்வழிக்கு மாற்றுவார்கள்.
பொதுவாக கண் பார்வை அற்றவர்களை தான் குருடர்கள் என்று எண்ணுகிறோம், அது தவறு எவனொருவன் தான் செய்த குற்றத்தை பிறர் அறியாத படி மறைத்து இன்பம் காண்கிறானோ அவனே கண்ணிருந்தாலும் குருடனாகிறான்.
மனிதன் தனக்கு தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அந்த மனிதனே பூரண சுகந்திரம் பெற்றவனாக இருப்பான்.
பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கவேண்டிய உண்மையான சொத்து அவர்களை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பதும், அவர்களுக்கு வேண்டிய கல்வியினை தருவதும் தான். இவ்விரண்டும் இருந்தால் அவர்கள் இறுதி வரை மகிழ்ச்சியாக வாழமுடியும்.
பிறரை இகழ்ந்து பேசுபவர்கள் உடலில் உயிரிருந்தும் இல்லாதவன் போலாகிறார்கள். ஒருவரை இகழ்தல் அல்லது அவர் சார்ந்த மதம், இனம் போன்றவற்றை இகழ்தல் அற்ப குணமே அதனை ஒருபோதும் செய்தல் கூடாது.
மேற்சொன்ன மகாத்மா காந்தியின் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்
1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2015 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 146 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்
48 MP CAMERA MOBILES NEW 1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB) (4 GB RAM) 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB 16...