tm

new

Browsing Category

Mobile Phone Tips

Wednesday, 15 August 2018

சுதந்திர தின விழா பேச்சு கட்டுரை

அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்..


இன்று நாம் இங்கே, நமது இந்திய தாய் திருநாட்டின் 72 -வது குடியரசு தின விழாவை, கொண்டாடி மகிழ, இங்கே கூடி இருக்கும் தருவாயில்... எனது சிறிய உரையின் மூலம், நம் எண்ணங்களை வரலாற்றின் பொன்னெழுத்தில் பதிந்த... நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூற விரும்புகின்றேன்!!!  நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். வெள்ளையன் சும்மா கொடுத்தானா சுதந்திரம்?


இல்லை இல்லை பாரதி கண்ணீரில் வடித்த அந்த கவிதை இதோ..


“தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா


இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....


மேலோர்கள் வெஞ்சிறையில் வீழுந்து வெந்திடவும்


நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் கண்டு


தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா


இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....”


என்று அந்த சோகத்தை சொல்லும் அவர் கவிதை, நமக்கு சுதந்திரம் கிடைக்க போராடிய நெஞ்சங்களை நம் கண் முன் நிறுத்துகிறது ...!!! 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி


இருந்ததும் இந்நாடே - அதன்


முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து


முடிந்ததும் இந்நாடே - அவர்


சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து


சிறந்ததும் இந்நாடே - இதை


வந்தனை கூறி மனதில் இறுத்தி - என்


வாயுற வாழ்த்தேனோ ? இதை


"வந்தே மதரம், வந்தே மதரம்"


என்று வணங்கேனோ ?


 ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சிறப்பாக கருதப்படும் சில நாட்கள் உள்ளன.  நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசுதின கொண்டாட்டம் அந்த நாட்களில் ஒன்றாகும். நம் நாடானது 1947-ல் சுதந்திரம் பெற்றாலும் குடியரசானது 1950-ல் தான். ஏனெனில் நாடு சுதந்திரம் அடைந்த போது சிறு சிறு சமஸ்தானங்களாக நாடு சிதறுண்டு கிடந்தது. அதன் மன்னர்கள் வெறுமனே ஆங்கிலேயர்களின் மாத ஊதியத்தில் காலத்தை ஊதாரியாக கழித்தவர்கள். இவர்களையெல்லாம் மன்னர் மான்யம் வழங்கி நாட்டை ஒரே இந்தியாவென கொண்டு வந்த பெருமை சர்தார் பட்டேல் அவர்களை சாரும்.  இந்த நாளில்தான் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு  சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து,  இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட , ஜனநாயக மற்றும் குடியரசு நாடு 'என பிரகடனம் செய்யப்பட்டது.  


எனவே இந்த நாளில், அனைத்து மாநில தலை நகரங்களிலும், முக்கிய இடங்களிலும்,  மிகவும் ஆடம்பரமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு,  குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

நாட்டில் தலைவர் எப்படியோ குடிகளும் அப்படி இருப்பார்.. நம் நாட்டின் சிறந்த தலைவராக திகழ்ந்த காமராஜர் அவர்களை இந்த தினத்தில் நினவு கூர்ந்து என் உரையை முடிக்க விழைகிறேன்..


 காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.


‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?


வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.


“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.


“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.


நாடு முன்னேற நமது  உழைப்பு தேவை..   


“வரப்பு உயர நீர் உயரும்


நீர் உயர நெல் உயரும்


நெல் உயர கோல் உயரும்


கொல் உயர கோன் உயர்வான்”


என்ற கூற்றுப்படி நாடு உயரும் எனகூறி, உழைப்பின்  மூலமே நாம் அனைவரும் உயர முடியும் எனக் கூறி இந்த குடியரசு தினத்தில் எல்லோரும் கடுமையை உழைத்து முன்னேற உறுதி ஏற்க வேண்டுமாய் கோரி என் உரையை முடிக்கிறேன்  


நன்றி


வணக்கம்


ஜெய் ஹிந்த்

Sunday, 12 August 2018

இதையும் கொஞ்சம் படிங்க மெதுவா சிரிங்க

“முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?”


“ஆம் ஔவையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள்.பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை.”

“ஔவையே, கறுப்பு, வெள்ளை -எளிய தமிழில் விளக்கு.”


“ஐயனே, வரி கட்டியது வெள்ளை.கட்டாதது கறுப்பு!”


வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?”


கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!”



“சுட்டது எது? சுட முடியாதது எது?”


சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்.!”



“ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?”


“ஒழிக்க நினைத்தது கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!”


” அம்பானி, அ

தானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?”


“தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!”


என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?”


“அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!”


மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு.”


“”பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்.”


“கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே,உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன்.தயங்காமல் கேள்.”


“ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என்கையில் தள்ளி விட்டான்.அதற்கு இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்”

Thursday, 9 August 2018

அதிகமாக ஆசைப்பட்டால் இப்படித்தான் இனி நடக்குமாம்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.


ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள் 


"வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்..."


இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. "இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். 


எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!" என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.


"நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்".


பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: "கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை..."


பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.


 "உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?" என்றது அதிர்ஷ்ட தேவதை.


 "போதாது. இன்னும் வேண்டும்" என்றான் பிச்சைக்காரன்.


அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, "உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது".


 பிச்சைக்காரன் சொன்னான்... "இன்னும் கொஞ்சம் வேண்டும்"...". அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.


"உன் கோணிப்பை கிழியப் போகிறது...". 


பிச்சைக்காரன் மறுத்தான். "இல்லை... நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்..." மறு வினாடி கோணிப்பை கிழிந்தது.


அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது.


 பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

48 MP CAMERA MOBILES NEW 1

48 MP CAMERA MOBILES NEW 1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB)  (4 GB RAM) 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB 16...