tm

new

Browsing Category

Mobile Phone Tips

Friday, 21 September 2018

10,11,12 வகுப்புகளுக்கு செப்டெம்பர் மாத துணைத் தேர்வு ரத்து

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு


கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


 உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு,


 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும். இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். 


மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 


குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்.


 அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது. 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.


Thursday, 13 September 2018

காந்தியின் பிறந்த நாள் போட்டி பள்ளிகளில் நடத்த உத்தரவு

காந்தியின் 150-ஆவது பிறந்த நாள்: பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் தொடர்பான போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


 இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: 


மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட அளவிலான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும். 


மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை தத்துவம், குறிக்கோள், காந்திய சிந்தனைகளான உண்மை, அமைதி, அஹிம்சை, தூய்மை போன்ற நெறிகளை உள்ளடக்கிய மேடை நாடகத்தை அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் செப்.17-ஆம் தேதி முதல் செப். 20-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். 


இதில் பெரும்பாலான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி வேலை நேரத்திலேயே போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Tuesday, 11 September 2018

பெட்ரோல் டீசல் விலை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

பெட்ரோல் விலை பற்றிய இரண்டு விசயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 | )பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது மத்திய அரசு போடுகின்ற வரியினால் தான் விலை ஏறுகிறது என நாம் அனைவரும் நினைக்கின்றோம். அது பற்றிய உண்மைகளை பார்ப்போம்.. 

 ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மத்திய, மாநில அரசுகள் போடும் வரி விபரம், ஒரு லிட்டர் உற்பத்தி விலை 36.93 ரூபாய் . மத்திய அரசு வரி விதிப்பு ரூ 23.03 ஒரு லிட்டருக்கு . 36.93 +23.03= 59.96  

குறிப்பு (ரூ23.03 - வில் 40% அதாவது ரூ 9.21 வை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தந்துவிடும்). மத்திய அரசு வரி விதிப்புக்கு பின் விலை 59.96. ரூபாய்... ரூ20.36 வரியாக மாநில அரசு வசூலிக்கிறது. 


 அதாவது 59.96 + 20.36 = 80.32 மாநில அரசின் வாட் வரி விதிப்புக்கு பின் 80.32-க்கு மக்கள் வாங்குகின்றனர். மொத்தத்தில் மத்திய அரசாங்கம் பெறும் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 13.82. மட்டுமே மாநில அரசாங்கம் பெறும் வரி 20.36 +9.21 = ரூ29.57 உற்பத்தி விலை - = 36.93 மத்திய அரசு வரி = 13.82 மாநில அரசு வரி = 29.57 ======== 80.32 ======== 

நண்பர்களே எத்தனைப் பேர்களுக்கு இந்த உண்மை தெர்யும். 


 2) இந்தியா 34 ரூபாய்க்கு பெட்ரோலை ஏற்றுமதி செய்கிறது. என்ன நியாயம் என்பது போல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. சராசரி இந்தியர்கள் மன நிலைப்படி ஒரு மாபெரும் ஏமாற்று வேலையை மத்திய அரசு செய்வதாக தோன்றும். தோன்றுவது இயல்புதான். இது புதிதாக தற்போது தான் செய்வது போல சொல்வது அப்பட்டமான பொய். இந்தியர்களுக்கு 80 ரூபாய். 

வெளிநாட்டினருக்கு ஏற்றுமதி 1லிட்டர் =34 ரூபாய். இது உண்மை. "மெய்பொருள்" அதாவது உண்மையை அறிந்து கொள்ள முயற்சிப்போமாக. ஏற்கனவே பெட்ரோல் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை அறிந்தோம். கச்சா எண்ணெயாக வந்து அதை Refind செய்யும் வேலையை மட்டுமே இந்தியா செய்து கொண்டு உள்ளது. அதாவது 2 லட்சத்து 4 ஆயிரம் கோடிக்கு வருடத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. 

JOB work என்ற அடிப்படையில் தான் இது நடக்கிறது. எந்த ஏற்றுமதிக்கும் வரி கிடையாது என்பதை அறியவும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ரூ 34 க்கு மேல் அனைத்தும் மேலே நான் கூறிய வரிகளுக்கு பின்பே 80 ரூபாய் ஆகிறது. வெளிநாடுகளுக்கு அனுப்பும் எந்த பொருளுக்கும் வரி கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துகிறேன்.

 மிக முக்கியமான விசயம் : இந்த விலையில் , இதே முறையில், ஏற்றுமதி செய்வது பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருக்கிறது.

Sunday, 2 September 2018

இதை படிச்சீங்களா இனி ஓட்டலில் சாப்பிட எண்ணமே வராது

தயவு செய்து படியுங்கள் ‘ஓட்டலில் சாப்பிடாதீங்க’ ஒரு முன்னாள் ஓட்டல் உரிமையாளர் தனது தொழில் ரகசியங்கள்(!) பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார். அதிர்ச்சி ரகம் தான் இவரது முகநூல் ஸ்டேட்டஸும். 

1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்து இல்லை. 

2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை. 

2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால், அது தடை செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிவப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும்.


 3. சோயா சாஸ்... விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. மாறாகத் தண்ணீரோ அல்லது ஒரு வாரத்துக்கு முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ கலந்து செய்கிறோம். 


4. எந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம். 


5. ஃப்ரைடு ரைஸ் செய்யும் போது சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம். 

6. இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஃப்ரைடு ரைஸ் செய்யும் சட்டியை நாங்கள் ஒரு வாரத்துக்குக் கழுவ மாட்டோம். கழுவி எண்ணெய் பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும். 

7. மோனோசோடியம் க்ளூட்டமேட்... இதை அதிகமாக பயன்படுத்துகிறோம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள் என்று பலரும் சொல்கிறார்கள். இதைத் தொட்டு நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும். சோதித்துப் பாருங்கள். 

8. மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

 9. காலாவதியான தக்காளி சாஸ் விலை கம்மியாகக் கிடைப்பதால் அதையே உபயோகப்படுத்துகிறோம்.

 10. சில்லி சாஸ்... அதை அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும். எல்லாம் மசாலா மணத்தில் மறந்து போய்விடும். 5 நிமிடத்தில் 8 பிளேட் தயாராகிவிடும். ஒரு பிளேட் 50 ரூபாய் என்றால் கூட 400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் சாப்பிட்டு என் உடலும் கெட்டுவிட்டது. 

மற்றவர்களின் உடல் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என என் மனசாட்சி உறுத்தியதால், அதை மூடிவிட்டு 12000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக வேறு வேலைக்குச் செல்கிறேன்!- தினேஷ் (ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்) 

தயவுசெய்து இந்த செய்தியை அதிகமாக பகிருங்கள்!

Saturday, 1 September 2018

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரி பார்த்துக் கொள்ளுங்கள்

*முக்கியஅறிவிப்பு* """""""""""""""'"''"''"''''''"""""""""""" *வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.* 

 *இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம்* *காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.* 

 *இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள்* *அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8* *ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.*

Wednesday, 15 August 2018

சுதந்திர தின விழா பேச்சு கட்டுரை

அனைவருக்கும் எனது அன்பான காலை வணக்கம்..


இன்று நாம் இங்கே, நமது இந்திய தாய் திருநாட்டின் 72 -வது குடியரசு தின விழாவை, கொண்டாடி மகிழ, இங்கே கூடி இருக்கும் தருவாயில்... எனது சிறிய உரையின் மூலம், நம் எண்ணங்களை வரலாற்றின் பொன்னெழுத்தில் பதிந்த... நம் முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூற விரும்புகின்றேன்!!!  நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். வெள்ளையன் சும்மா கொடுத்தானா சுதந்திரம்?


இல்லை இல்லை பாரதி கண்ணீரில் வடித்த அந்த கவிதை இதோ..


“தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா


இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....


மேலோர்கள் வெஞ்சிறையில் வீழுந்து வெந்திடவும்


நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் கண்டு


தண்ணீர் விட்டா வளர்த்தோம் - சர்வேசா


இப்பயிரை கண்ணீரால் காத்தோம்....”


என்று அந்த சோகத்தை சொல்லும் அவர் கவிதை, நமக்கு சுதந்திரம் கிடைக்க போராடிய நெஞ்சங்களை நம் கண் முன் நிறுத்துகிறது ...!!! 


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி


இருந்ததும் இந்நாடே - அதன்


முந்தயர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து


முடிந்ததும் இந்நாடே - அவர்


சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து


சிறந்ததும் இந்நாடே - இதை


வந்தனை கூறி மனதில் இறுத்தி - என்


வாயுற வாழ்த்தேனோ ? இதை


"வந்தே மதரம், வந்தே மதரம்"


என்று வணங்கேனோ ?


 ஒவ்வொரு நாட்டின் வரலாற்றிலும் சிறப்பாக கருதப்படும் சில நாட்கள் உள்ளன.  நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசுதின கொண்டாட்டம் அந்த நாட்களில் ஒன்றாகும். நம் நாடானது 1947-ல் சுதந்திரம் பெற்றாலும் குடியரசானது 1950-ல் தான். ஏனெனில் நாடு சுதந்திரம் அடைந்த போது சிறு சிறு சமஸ்தானங்களாக நாடு சிதறுண்டு கிடந்தது. அதன் மன்னர்கள் வெறுமனே ஆங்கிலேயர்களின் மாத ஊதியத்தில் காலத்தை ஊதாரியாக கழித்தவர்கள். இவர்களையெல்லாம் மன்னர் மான்யம் வழங்கி நாட்டை ஒரே இந்தியாவென கொண்டு வந்த பெருமை சர்தார் பட்டேல் அவர்களை சாரும்.  இந்த நாளில்தான் சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு  சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து,  இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட , ஜனநாயக மற்றும் குடியரசு நாடு 'என பிரகடனம் செய்யப்பட்டது.  


எனவே இந்த நாளில், அனைத்து மாநில தலை நகரங்களிலும், முக்கிய இடங்களிலும்,  மிகவும் ஆடம்பரமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு,  குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  

நாட்டில் தலைவர் எப்படியோ குடிகளும் அப்படி இருப்பார்.. நம் நாட்டின் சிறந்த தலைவராக திகழ்ந்த காமராஜர் அவர்களை இந்த தினத்தில் நினவு கூர்ந்து என் உரையை முடிக்க விழைகிறேன்..


 காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.


‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?

பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?


வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.


“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.


“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.


நாடு முன்னேற நமது  உழைப்பு தேவை..   


“வரப்பு உயர நீர் உயரும்


நீர் உயர நெல் உயரும்


நெல் உயர கோல் உயரும்


கொல் உயர கோன் உயர்வான்”


என்ற கூற்றுப்படி நாடு உயரும் எனகூறி, உழைப்பின்  மூலமே நாம் அனைவரும் உயர முடியும் எனக் கூறி இந்த குடியரசு தினத்தில் எல்லோரும் கடுமையை உழைத்து முன்னேற உறுதி ஏற்க வேண்டுமாய் கோரி என் உரையை முடிக்கிறேன்  


நன்றி


வணக்கம்


ஜெய் ஹிந்த்

Sunday, 12 August 2018

இதையும் கொஞ்சம் படிங்க மெதுவா சிரிங்க

“முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?”


“ஆம் ஔவையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள்.பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை.”

“ஔவையே, கறுப்பு, வெள்ளை -எளிய தமிழில் விளக்கு.”


“ஐயனே, வரி கட்டியது வெள்ளை.கட்டாதது கறுப்பு!”


வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?”


கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!”



“சுட்டது எது? சுட முடியாதது எது?”


சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்.!”



“ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?”


“ஒழிக்க நினைத்தது கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!”


” அம்பானி, அ

தானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?”


“தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!”


என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?”


“அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!”


மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு.”


“”பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்.”


“கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே,உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன்.தயங்காமல் கேள்.”


“ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என்கையில் தள்ளி விட்டான்.அதற்கு இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்”

48 MP CAMERA MOBILES NEW 1

48 MP CAMERA MOBILES NEW 1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB)  (4 GB RAM) 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB 16...