தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது, யாரோடு எல்லாம் குழந்தை பழகியது, சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் ஏதாவது நடந்ததா என்பதை பெற்றோர்கள் பொறுமையுடன் கேட்க வேண்டும். 'உனக்கு ஒரு பிரச்னை வந்தால் உடனடியாக எங்ககிட்ட வந்து சொல்லு. உன் மேல எந்த தப்பும் இல்லாத பட்சத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. தைரியமா இரு' என்று குழந்தைகளுக்கு நம்பகமான நம்பிக்கை ஊட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பகட்டத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள், பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு புரிதலுடன், தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போது, தனக்கோ, தன் தோழிக்கு ஏதாவது நடந்தால்கூட, தன் பெற்றோர்களிடம் அதைச் சொல்லி, பிரச்னையை சரிசெய்ய முடியும்.
* ஒருவேளை குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தால், அச்சம்பவத்தில் இருந்து அது முழுமையாக வெளிவர பெற்றோர்கள் பலம் கொடுக்க வேண்டும். மாறாக நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும்படியே நடந்து கொள்வது, அச்சம்பவத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டுவது, ட்யூஷன், அவுட்டிங் என்று அனைத்தையும் முடக்கி அவர்களை வெளியுலகில் இருந்து துண்டிப்பது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வது... இவையெல்லாம் குழந்தைகளுக்கு இன்னும் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
* குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் தந்தவர்கள் பற்றி காவல் துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும். அவமானமாக நினைத்தோ, அச்சத்தினாலோ அதைச் செய்யாமல் விட்டால், அதே துன்புறுத்தலை அந்தக் குழந்தைக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ சம்பந்தப்பட்ட மோசமான நபர் மீண்டும் தரும் அபாயம் இருக்கிறது.
* குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களை, அவர்களின் பின்புலன்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம்.
ஒரு விஷயம் நடந்த பின்னர் வருத்தப்படுவதைவிட, முன்னரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறார், நப்பின்னை.
No comments:
Post a Comment