tm

new

Browsing Category

Mobile Phone Tips

Tuesday, 29 May 2018

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விண்ணப்பம் செய்ய

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.


பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூன் 25ல் சிறப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ம் தேதி தேர்வு முடிவடைகிறது. தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கூடாது. தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.

    நாள்    பாடம் 

ஜூன்     25    மொழித்தாள் 1

ஜூன்     26    மொழித்தாள் 2

ஜூன்     27    ஆங்கிலம் 1

ஜூன்     28    ஆங்கிலம் 2

ஜூன்     29    வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

ஜூன்     30    கணக்கு, விலங்கியல், வணிகவியல்

ஜூலை     2    தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு கணினி அறிவியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல்

ஜூலை     3    உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம் 

ஜூலை     4    இயற்பியல், பொருளியல், வரைவாளர், தொழில்பாடம்


Saturday, 26 May 2018

கொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி

கொள்ளையருக்கே ஷாக் கொடுத்த  வங்கி


 சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ...


கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும்  மிரட்டினா் .  



""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது.அசையாமல் படுங்கள்"" 


அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....



அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்.



கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொரு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும் என்றான்.



வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .


இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .


மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . 


கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.

Friday, 25 May 2018

பள்ளி ஆரம்பம் - உங்கள் குழந்தையின் பாதுகாப்பு ?

தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி, அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது, யாரோடு எல்லாம் குழந்தை பழகியது, சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் ஏதாவது நடந்ததா என்பதை பெற்றோர்கள் பொறுமையுடன் கேட்க வேண்டும். 'உனக்கு ஒரு பிரச்னை வந்தால் உடனடியாக எங்ககிட்ட வந்து சொல்லு. உன் மேல எந்த தப்பும் இல்லாத பட்சத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. தைரியமா இரு' என்று குழந்தைகளுக்கு நம்பகமான நம்பிக்கை ஊட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பகட்டத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள், பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு புரிதலுடன், தோழமையுடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போது, தனக்கோ, தன் தோழிக்கு ஏதாவது நடந்தால்கூட, தன் பெற்றோர்களிடம் அதைச் சொல்லி, பிரச்னையை சரிசெய்ய முடியும்.


*   ஒருவேளை குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருந்தால், அச்சம்பவத்தில் இருந்து அது முழுமையாக வெளிவர பெற்றோர்கள் பலம் கொடுக்க வேண்டும். மாறாக நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும்படியே நடந்து கொள்வது, அச்சம்பவத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டுவது, ட்யூஷன், அவுட்டிங் என்று அனைத்தையும் முடக்கி அவர்களை வெளியுலகில் இருந்து துண்டிப்பது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வது... இவையெல்லாம் குழந்தைகளுக்கு இன்னும் பெரிய பாதிப்பை உண்டாக்கும். 


* குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் தந்தவர்கள் பற்றி காவல் துறையில் பெற்றோர்கள் புகார் அளிக்க வேண்டும். அவமானமாக நினைத்தோ, அச்சத்தினாலோ அதைச் செய்யாமல் விட்டால், அதே துன்புறுத்தலை அந்தக் குழந்தைக்கோ அல்லது மற்ற குழந்தைகளுக்கோ சம்பந்தப்பட்ட மோசமான நபர் மீண்டும் தரும் அபாயம் இருக்கிறது. 


*  குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களை, அவர்களின் பின்புலன்கள் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். 


ஒரு விஷயம் நடந்த பின்னர் வருத்தப்படுவதைவிட, முன்னரே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறார், நப்பின்னை.

குழந்தைகள் மீது அன்பான கட்டுப்பாடு விதியுங்கள்

* பிள்ளைகளைச் செல்லமாக வளர்ப்பது சரிதான். ஆனால், அதற்கும் ஒரு வரையறை இருக்கிறது. அவர்களிடம் சில விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும்.


* பண வசதிகளை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.


* ஒரு வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் பாக்கெட் மணி கொடுங்கள். இனி, ‘அடுத்த திங்கட்கிழமைதான் பாக்கெட் மணி’ என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். அப்போதுதான், வாரக் கடைசியில் ஊர் சுற்றுவது குறையும். ஒருவேளை, நண்பர்களிடம் வாங்கினால், அதையும் இந்தப் பாக்கெட் மணியில் இருந்துதான் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிடுங்கள்.


* இரவு தாமதமாக வந்தால் ‘கதவைத் திறக்க மாட்டோம்… நீ கோபித்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குப் போனால், அப்படியே மறுநாளும் அங்கேயே இரு’ என்று சொல்லுங்கள். நீண்ட நாட்கள் நண்பர்களின் வீடுகளில் இருக்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும்.

உங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கான விளைவுகளைச் சந்திக்கவிடுங்கள். பிரச்னையாகிவிடக் கூடாது என்று அவர்களைத் தப்பிக்கவைத்தால், அது உங்களுக்குத்தான் வினை.


* சேமிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்து பழக்குங்கள். அந்தச் சேமிப்பில் இருந்து தனது அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உடன்பிறந்தவர்களுக்கு அன்பளிப்பு வாங்கித்தரச் சொல்லுங்கள். அதனால் பகிர்ந்துகொடுத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நல்ல உணர்வுகள் அவர்களிடம் உருவாகும்.


* குழந்தைகள் வளரவளர பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டிபோல ஆடம்பரமாக கொண்டாடாதீர்கள். ஆதரவற்றக் குழந்தைங்களுடன் உங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். அப்போதுதான், நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள் என்பதும், அப்பா அம்மாவுடைய அருமையும் அவர்களுக்குப் புரியும்.


* பிள்ளைகளுக்கு 13, 14 வயது வரும்போது, நீங்கள் குடும்ப பட்ஜெட் போடும் நேரத்தில் அவர்களையும் உட்காரவையுங்கள். அப்போதுதான், ஒவ்வொரு காசுக்கும் அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பது புரியும்.


* ‘வீட்டைவிட்டு ஓடிப் போய்டுேவன்’னு குழந்தைகள் அடிக்கடி சென்டிமென்ட்டா மிரட்டுவார்கள். ‘போனா போ’ என்று சொல்லாமல், ‘நீ போனா நாங்க எவ்ளோ வருத்தப் படுவோம் தெரியுமா?’ என்று நீங்களும் அதே சென்டிமென்டால் அடிங்க.


* பிள்ளைகள் உங்களிடம் பேசவரும்போது அவர்கள் சொல்வதில் கவனம் செலுத்துங்கள். அந்த நேரத்தில் மொபைலில் பேசுவது, டி.வி பார்ப்பது போன்றவற்றைத் தவிருங்கள். முக்கியமான வேலையில் இருந்தால், வேலை முடிந்தபிறகு அவர்களிடம் பேசுங்கள்.


* உங்கள் குழந்தையுடன் தினமும் முடிந்த அளவு  நேரத்தைச் செலவழியுங்கள்.  பிறர் மீதான கோபத்தைக் குழந்தைகள் மீது காட்டாதீர்கள்.


* கணவன், மனைவி சண்டையை ஒருபோதும் குழந்தைகளிடம் எடுத்துச் செல்லாதீர்கள்.


* ஸ்கூல், காலேஜில் நடக்கும் பெற்றோர் – ஆசிரியர் மீட்டிங் என்றால் தவறாமல் செல்லுங்கள். அப்போதுதான், உங்கள் குழந்தையின் நடவடிக்கைகள் பற்றித் தெரியவரும்.


* உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.  அவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களின் தொடர்பு எண்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Tuesday, 22 May 2018

முல்லாவின் பிரச்சனையும் முடிவும்

பிரச்சினைகள் இல்லாத மனிதன் யார்? வாழ்க்கை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வாழ்வில் பிரச்சினைகளும்.


வாய்த்தவர்களுக்குத்தான் வாழ்க்கை என பலர் வறட்டுக் கௌரவம் பேசுகின்றார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, நம்முடைய மனம்தான் பிரச்சினைகளின் பிள்ளையார் சுழி, அது தான் ஆணிவேர், பிரச்சினைகள் விருட்சமான பின் ஆணிவேரைத் தேடுவதில் அர்த்தமில்லை.


வாழ்க்கையின் தாத்பரியமே நல்லெண்ணங்கள் தான். நல்லெண்ணம் இல்லாமல் ஆரம்பிக்கும் எந்தவொரு செயற்பாடுமே இறுதியில் பிரச்சினை என்ற வட்டத்திற்குள்தான் சிக்குண்டு போகும். பின்னர் அந்த சிக்கல்களை சமாளிப்பதிலேயே காலமும் காணாமல் போய்விடும்.




காலம் எதற்காகவும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. வாழ்க்கை ஒரு வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடருவதும் இல்லை. பயம், கவலை, வெறுப்பு, காமம் போன்ற குப்பைகளை எம் மன வீட்டிலிருந்து எறியாவிட்டால் வாழ்க்கை சுபீட்சம் பெறாது. பிரச்சினைகள் ஆரம்பமான மனதை விடுத்து பல நேரங்களில் நாம் தீர்வுகளைத் தெருவில் தேடுகின்றோம். 


முல்லா நஸ்ருதீன் எதையோ தொலைத்துவிட்டுத் தரையில் தேடிக்கொண்டிருந்தார். எதைத் தொலைத்துவிட்டீர்கள் முல்லா? என்று வழியில் போனவர் கேட்டார். “எனது சாவியை” என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து தேடினார் முல்லா. மற்றவரும் சேர்ந்து தேடத் தொடங்கினார். சிறிது நேரத் தேடலின் பின் வழிப்போக்கர் முல்லாவிடம் கேட்டார், “எங்கே சாவியைத் தொலைத்தீர்கள்?” என்று, முல்லா, “என் வீட்டில் தான் தொலைத்தேன்,” என்றார். வழிப்போக்கருக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு, “வீட்டில் தொலைத்ததை ஏன் தெருவில் தேடுகின்றீர்கள்?” என்று கடுகடுத்தார்.


முல்லா அமைதியாக சொன்னார், “இங்கே தான் வெளிச்சம் இருக்கிறது” என்று!


இப்படித்தான் நாமும் பிரச்சினைகளுக்கான தீர்வை எம்மிடமே தேடுவதை விடுத்து வெளியில் தேடுகின்றோம். நாம் என்ன தவறு செய்தோம்? எதனால் இப்பிரச்சினை நேர்ந்தது? என்று சிந்தித்து தெளிவு பெறுவதில்லை.


சரி, நாம்தான் பிரச்சினைகளுக்கு சூத்திரதாரியாக இருந்துவிட்டோம், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதை தைரியமாக எதிர்கொள்கிறோமா? அதுவும் இல்லை! 


“இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார்

இருளும் ஒரு பெருமையென எண்ணி வாழ்ந்தேன்”


என்பது போல பிரச்சினைகளுக்குள்ளேயே வியாபித்திருப்பதை சிலர் பெருமையாக எண்ணிக்கொண்டு அதனை, “நான் பார்க்காத பிரச்சினையா? எல்லாம் பழகிப்போச்சு” என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்வார்கள்.


அதிலிருந்து வெளியேறுவதற்கு சிறிதும் முயற்சிக்க மாட்டார்கள். பிரச்சினைகளுக்குள் வீழ்வது மனித பலவீனம், அதற்குள் வீழ்ந்தே கிடப்பது மதியீனம், வீழ்ந்தும் எழுவதுதான் மனிதம்!


எல்லாம் விதியென்று நோவதை விட, சதியென்று பழிப்பதை விட, மதியென்ற ஒன்றினால் சமாளிப்பதே சாலச் சிறந்தது. அடிப்படையில் வாழ்வு என்பதே எம்முடைய சுய தேவைக்கான போராட்டம் தான், போராடித்தான் பலவற்றைப் பெறவேண்டியிருக்கிறது. சோர்ந்துவிட்ட மனிதன் தனக்குத்தானே பகைவன், துணிந்துவிட்ட மனிதன் சாவுக்கும் பகைவன், ஆகவே துணிந்து போராடினால் தீர்வை எளிதில் பெற்றுவிடலாம்.


சிக்கல் இல்லாத வாழ்வுடன்தான் நாம் பிறந்தோம். பிறகு நாமாகவே சிக்கல்களை ஏற்படுத்திக்கொள்கிறோம். சரியாகக் கவனித்து சிக்கல்களை அவிழ்த்தால்தான் வாழ்க்கை இனிதாகும். 


வாழ்க்கையை வாழப்பார் அல்லது வாழ்க்கைக்கேற்ப உன்னை வார்க்கப்பார் என்றார் வைரமுத்து, உண்மைதான் வாழ்க்கை வாழ்வதற்குத்தான், அழுதுவடிப்பதற்கல்ல, அத்தகைய வாழ்க்கையை பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும், பிரச்சினைகள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் எமக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தரும். 


“வாழ்க்கை என்றால் ஆயிரம் நடக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்.

Sunday, 20 May 2018

நீங்களும் உன்னத நிலையை அடைய வேண்டுமா?

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்பட்டு எழுதிய இளைஞர் ஒருவருக்கு, எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள் வழங்கிய அறிவுரை அற்புதமானது...


1. புத்தகங்களை துணை கொள்.

2. உடலுழைப்பை அதிகரி.

3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.

4. குளிர் நீரில் குளி.

5. கொஞ்சமாய் சாப்பிடு.

6. தியானம் கைகொள்.

7. இறவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.

8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.

9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.

10. எத்தனை வலித்தாலும் அழாதே. சிரி.

11. ஆத்திரம் அகற்று.

12. கேலிக்கு புன்னகை தா.

13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.

14. நட்புக்கு நட்பு செய்.

15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.

16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.

17. அன்பு செய்தால் நன்றி சொல்.

18. இதமாகப் பேசு.

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம் ! ! !

வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

Friday, 18 May 2018

தபால்தலை சேகரித்தால் பரிசு

வரும் கல்வியாண்டு முதல் அரிய வகை தபால் தலை சேகரிப்புக்கு ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை : 

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்


தமிழகத்தில் 2018-19ம் கல்வியாண்டு முதல் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால் ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தபால்துறை அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மத்திய அரசு சார்பில் தபால்துறை மூலமாக ‘தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டத்தின் கீழ் வரும் கல்வியாண்டு முதல் அரிய வகை தபால்தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்ந்த 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அரிய வகை தபால் தலைகளை சேகரித்து தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். 

அத்துடன் மாணவர்களுக்கு பொதுஅறிவு தொடர்பான எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். இதில் தபால் தலைகள் சேகரிக்க 25 மதிப்பெண்கள், பொது அறிவு தேர்வில் 25 மதிப்பெண்கள் என்று 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறந்த 10 மாணவர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 40 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக தலா ₹8 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்கான தேர்வு தபால்துறை மூலம் நடத்தப்படும்’ என்று தெரிவித்தார்.


Thursday, 17 May 2018

Wednesday, 16 May 2018

ஜுனில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு

தேர்வு முடிவுகள் 

பிளஸ்2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதள முகவரிகளில் வெளியிடப்படவுள்ளது. 


தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.  இது தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, மாவட்ட, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோன்று பள்ளி மாணவர்கள் வழக்கம்போல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

இத்துடன் மாணவர்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.  தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு இதேபோன்று அனுப்பி வைக்கப்படும். 


 ஜூனில் சிறப்பு துணைத் தேர்வு


 தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.


 மே 21 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 


 பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் மே 21-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் மே 21-ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற அல்லது தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர்கள் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். 


மேலும் மே 21 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழை தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


 விடைத்தாள் நகல் பெறுவதற்கு...


விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வியாழக்கிழமை (மே 17) முதல் சனிக்கிழமை (மே 19) வரை விண்ணப்பிக்கலாம்.  தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க முடியும்.  விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 


விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள், இணையதள முகவரி ஆகிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் தனித்தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. 


பின்னர், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபாக்கும் பணியும் நடைபெற்றது. எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

www.dge.tn.nic.in, 


www.dge.tn.gov.in 


ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Sunday, 13 May 2018

அன்னையர் தினம்

அன்னையர் தினம்
அன்னையர் தினம்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ல் வெளியீடு

மே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்



தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


  9 லட்சம் மாணவர்கள்:


 தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவியர், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7, 620 பேர் எழுதினர்.  


பெற்றோர், மாணவர்களுக்கு... 


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப் படுத்தப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 


ஆன்லைன் முறை ஏன்? 


அரசுத் தேர்வுத் துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது. 


ஊடகவியலாளர்களுக்கு... 


தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகவியலாளர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்தாண்டு முதல் தேர்வுத் துறை அறிமுகப்படுத்தவுள்ளது.

Friday, 11 May 2018

199 ரூபாய்க்கு ஜியோ வழங்கும் 25 GB

199 ரூபாய்க்கு ஜியோ வழங்கும் 25 GB


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்கும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனால், வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் அதிரடியான சலுகைகளை, மிகக் குறைந்த விலையில் போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.

ரூ.199க்கு அன்லிமிடட் கால்ஸ், மாதத்துக்கு 25 ஜிபி நெட், வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 50 காசுகள் என பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. இத்திட்டம் வரும் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜியோ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் சிம்கார்டைப் போட்டவுடன் அனைத்து வசதிகளும், அதாவது வாய்ஸ் கால், இன்டர்நெட், எஸ்எம்எஸ், சர்வதேச அழைப்புகள் ஆகியவை அனைத்தும் முன்கூட்டியே ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும்.

இதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்காக ரோமிங் வசதியையும், டாரிப்களையும் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த சேவையையும் பெற்றுக்கொண்டு, ஜியோ சேவைக்கு மாறிக்கொள்ள முடியும்.

ஜியோ போஸ்ட்பெய்ட் சேவையின் முக்கிய அம்சமாக அந்த நிறுவனம் குறிப்பிடுகையில், அதிகபட்சமான பில் கட்ட வேண்டியது இருக்காது, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது தங்களின் பில் கட்டணத்தை தாங்களாகவே சோதனை செய்து பார்க்க முடியும்.

இதன்படி மாதத்துக்கு ரூ.199-க்கு போஸ்ட்பெய்ட் சேவை பெறுவோருக்கு, மாதம்முழுவதும் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் இலவசமாக அழைப்புச் செய்யலாம். வெளிநாடுகளில் பேசும் போது நிமிடத்துக்கு 50 காசு கட்டணம். சர்வதேச அழைப்புக்கு எந்தவிதமான காப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லை, ரோமிங் இலவசம், உள்நாட்டில் அன்லிமிடட் எஸ்எம்எஸ் சேவை. மாதத்துக்கு 25 ஜிமி இன்டர்நெட் இலவசம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களில் போஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஜியோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரும் 15-ம் தேதி முதல் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் சேவையைத் தொடங்குகிறது.

  

இதே சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.399க்கும், வோடபோன் நிறுவனம் ரூ.399க்கும், ஐடியா நிறுவனம் ரூ.389க்கும் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Sunday, 6 May 2018

பெற்றோர் தன் குழந்தைகளுக்கு கூற வேண்டிய அறிவுரைகள்



குழந்தைகளுக்கு கூற வேண்டிய அவசிய அறிவுரைகள்



1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.


2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.


3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.


4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.


5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!


6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.


7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்


8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.


9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!


10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.


11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!


12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.


13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.


14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!


15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.


16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!


17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.


18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்கப் படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!


19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.


20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"


21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.

சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.


22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!


23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!


24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!


25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!


26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள்.  சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கும்.

Thursday, 3 May 2018

போனில் இருந்து மின் கட்டணம் செலுத்தலாம் வாங்க


மின் கட்டணம் செலுத்த புதிய செயலி அறிமுகம்



‘நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும் எளிதில் செலுத்த ‘பாரத் பில்பே’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

இந்த சேவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் கைகோர்த்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2.79 கோடி பேர் மிக எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பில்பேயின் அடையாள முத்திரையுடன் கூடிய குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சிடப்பட்ட ரசீது மூலமாகவோ தகவல் அனுப்பப்படும்.


இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குனர் மனோகரன் கூறுகையில், ‘பாரத் பில்பே மூலம் இனி மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்த முடியும். இது அவர்களது நேரத்தையும், கட்டணம் செலுத்த மேற்கொள்ளும் போக்குவரத்துக்கான செலவையும் மிச்சப்படுத்த உதவும்’ என்றார்.

11 விதிமுறைகள் மாணவர்களுக்கு அறிமுகம்

*மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.*


மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


*கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:*


* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.


* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.


* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது


* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.


* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.


* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.


* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.


* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.


* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.


* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.

திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.


* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.


இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

48 MP CAMERA MOBILES NEW 1

48 MP CAMERA MOBILES NEW 1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB)  (4 GB RAM) 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB 16...