பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூன் 25ல் சிறப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது. ஜூலை 4ம் தேதி தேர்வு முடிவடைகிறது. தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க கூடாது. தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35 சேர்த்து பணமாக செலுத்த வேண்டும். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் நாள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.
நாள் பாடம்
ஜூன் 25 மொழித்தாள் 1
ஜூன் 26 மொழித்தாள் 2
ஜூன் 27 ஆங்கிலம் 1
ஜூன் 28 ஆங்கிலம் 2
ஜூன் 29 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
ஜூன் 30 கணக்கு, விலங்கியல், வணிகவியல்
ஜூலை 2 தொடர்பு ஆங்கிலம், இந்திய பண்பாடு கணினி அறிவியல், சிறப்புத் தமிழ், புள்ளியியல்
ஜூலை 3 உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
ஜூலை 4 இயற்பியல், பொருளியல், வரைவாளர், தொழில்பாடம்
No comments:
Post a Comment