tm

new

Browsing Category

Mobile Phone Tips

Friday, 1 June 2018

பெண்கள் கவனத்திற்கு இது அவசியம்

ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு - உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ இணையம் முழுவதும் பரவி இருக்கலாம்!!!


இந்த ஃபோட்டோவில் இருக்கும் பெண், ஒரு கல்லூரி மாணவி ஆவார். ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் ஃபோட்டோவாக இவரது புகைப்படத்தை போட, அதை டவுன்லோடு செய்து, செக்ஸ் சாட், மற்றும் இதர மட்டமான பக்கங்களில் பகிரப் பட்டது. ஆபாச கமென்ட்டுகளுடன் பல மாதங்கள் அந்த ஃபோட்டோ ஃபேஸ்புக்கின் பல வக்கிர பக்கங்களில் இருந்தது.


ஜாக்கிரதை!!! உங்கள் ஃபோட்டோ கூட இப்படி பகிரப் பட்டிருக்கலாம். அதை எப்படி கண்டுப்பிடிப்பது? உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோக்கள் ஒவ்வொன்றாக கூகிள் இமேஜ் சேர்ச்சில் போட்டு, அதன் அருகில் உள்ள கேமரா பட்டனை அழுத்தவும். உங்கள் ஃபோட்டோ வேறு பக்கங்களில் இருந்தால், அந்த சைட்களின் லிங்க் அதில் இருக்கும். அப்படி உங்கள் படம் பல்வேறு சைட்களில் வந்திருந்தால், விரக்தி அடைய வேண்டாம். ஃபேஸ்புக்கில் ஐந்து பெண்களில் ஒருவரின் ஃபோட்டோ இந்த மாதிரி திருடப்படுகிறது. 

அந்த சைட்களுக்கு போக வேண்டாம். உடனே (அன்றே) எங்கள் பேஜில் ஒரு மெசேஜ் போடுங்கள். (போஸ்ட்டாக போட வேண்டாம். மெசேஜ் செய்யுங்கள்). பின்னர் உங்கள் ப்ரொஃபைல் ஃபோட்டோ லாக் செய்யுங்கள்.. சில வக்கிர புத்தி படைத்த உங்கள் ஃப்ரென்ட் லிஸ்டில் இருக்கும் சிலர் அதை கூகிளில் போட்டு, ஆபாச சைட்களுக்கு போய்ப் பார்த்து மகிழலாம். 


லிங்க் ஐ மெசேஜ் இன்பாக்ஸ் க்கு அனுப்பி வையுங்கள். முடிந்தவரை நாங்களும் உங்கள் படத்தை நீக்க முயற்சி செய்கிறோம். இதற்கு பிரதி பலனாக நாங்கள் எதிர்பார்ப்பது ஒரு சுத்தமான பாதுகாப்பான இணையம், நாளை நாம், தோழிகள், நம் தாய், சகோதரி, மகள்கள் பயன்படுத்துவதற்கு.


இந்த போஸ்ட்டை தயவு செய்து பகிரவும். இதில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள்.,

நன்றி :

இணைய பெண்கள் பாதுகாப்பு குழு


No comments:

Post a Comment

48 MP CAMERA MOBILES NEW 1

48 MP CAMERA MOBILES NEW 1. Redmi Note 7S (Sapphire Blue, 64 GB)  (4 GB RAM) 4 GB RAM | 64 GB ROM | Expandable Upto 256 GB 16...